பாவம் புத்தக விமர்சனம்!
நேற்று தி ஹிந்து நாளிதழின் இணைப்புப் பகுதியில், புத்தக விமர்சனம் எப்படி தமக்கான இடத்தை இழந்துகொண்டு வருகிறது என்பது பற்றி நீண்ட கட்டுரை வந்திருக்கிறது. 1500 சொற்களில் விமர்சனங்கள் எழுதிய காலம் போய், இப்போது, 200 - 400 சொற்களில் அறிமுகங்கள் எழுதும் காலம் வந்துவிட்டது.
முழு கட்டுரை இதோ.
தமிழில் நிலைமை இவ்வளவு மோசமாகவில்லை என்றே நினைக்கிறேன். தினமணி, தினமலர், தினதந்தி போன்ற நாளிதழ்களில் இருந்து, எல்லா சிறு பத்திரிகைகளிலும் புத்தக விமர்சனத்துக்கு என்று சில பக்கங்கள் ஒதுக்கப்படுவதைப் பார்க்கிறேன்.
ஆனால், எனக்கு இந்தத் தமிழ் விமர்சனங்களில் உள்ள ஒரு குறை மிகவும் எரிச்சல் தருவது. சட்டென விமர்சகருக்குக் கொம்பு முளைத்துவிடும். விமர்சகர் ஒரு ஐவரி டவரில் போய் உட்கார்ந்துகொள்வார். நல்ல வார்த்தை நாலு அவரிடம் இருந்து வாங்குவது, முத்து குளிப்பது மாதிரி ஆகிவிடும்.
அமுதசுரபி, தமிழ் சிஃபி டாட் காம் ஆகிய இடங்களில் எழுதும் வெங்கட் சாமிநாதனின் விமர்சனங்களில் அன்னியோன்யம் இருப்பதை உணர்கிறேன். படிக்கும்போதே புத்தகத்தை வாங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.